உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயிர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் செயலியில் தனி உரிமை பாதுகாப்பு தேவைப்படும் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அழைப்புகளில் ஐபி முகவரியை பாதுகாப்பதற்காக புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வசதி அழைப்பின் மறுபக்கத்தில் இருப்பவர்களிடமிருந்து உங்கள் ஐபியை பாதுகாக்கின்றது. இந்த வசதி மூலமாக அழைப்புகள் whatsapp சேவை இயக்கங்கள் மூலம் ரிலே செய்யப்படும்.

இதனால் உங்களது உண்மையான ஐபி முகவரியும் மறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அழைப்பு தயாரிப்புகள் பங்கேற்பாளர்கள் இடையே பியர் – டு- பியர் இணைப்புகளை கொண்டுள்ள நிலையில் இதன் மூலமாக வேகமாக தரவு பரிமாற்றம் மற்றும் சிறந்த அழைப்பு தரத்தை அனுமதிக்கிறது. இதனால் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் ஐபி முகவரியை அறிந்து கொள்ள முடியும். ஆனால் சில பயனர்களுக்கு தனி உரிமை தேவைப்படும் என்பதால் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.