பயனர்களுடைய அனுபவத்தை மேலும் சிறப்பாகும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்வது , பிரபலங்களை பின்தொடர்வது, இமெயில் மூலமாக அக்கௌன்ட் லாகின் செய்யும் வசதி என அடுக்கடுக்காய் ஏராளமான அப்டேட் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் பேசிய சேட்டில் இருக்கும் குறிப்பிட்ட செய்தியை மட்டும் PIN  செய்து கொள்ளும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று முக்கிய சேட்டுகளை  பின் செய்யும் வசதி இருந்துவரும் நிலையில் தற்போது குறிப்பிட்ட நபரின் செய்தியை பின் செய்யும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் தற்போதைக்கு பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து பயனர்களும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.