DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், மாண்புமிகு அமைச்சர்.. என்னுடைய அன்பு தம்பி பா. சுப்பிரமணியன் அவர்களே….  அவரை எம்எல்ஏவாக இருந்த போது, பார்த்துக்கிறேன்… மேயராக இருந்த போது பார்த்திருக்கிறேன். மந்திரியா ஆனதுக்கு அப்புறமும் பார்த்திருக்கிறேன். அவரது உடையும் மாறவில்லை,  நடையும் மாறவில்லை,  எடையும் கூடவில்லை. ஏன்னா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் உடைய நூற்றாண்டு விழா இல்லையா ?  கொஞ்சமாவது அவர் மாதிரி அடுக்கு மொழியில் பேசறதுக்கு முயற்சி பண்ணனும் இல்லையா ? அதனால்தான் இந்த நடை, உடை, எடை எல்லாம்….

ஒரு விழாவில் எந்த அரசியல் கட்சி கூட்டமாக இருந்தாலும் சரி,  ஆண்களுக்கு இணையாக பெண்களும் உட்கார்ந்திருப்பது இந்த விழாவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.. எனக்கு சினிமாவில் பெரிய பிரேக்காக அமைந்த படங்களில் முக்கியமான படம் காக்கி சட்டை தான். உங்களுக்கு அந்த டயலாக் எல்லாம் ஞாபகம் இருக்கும்…  தகடு… தகடு தகடு…. அது காக்கி சட்டையில் தான் பேசுனது. அதே மாதிரி இன்னொரு வசனம் ரொம்ப பாப்புலரு.

அத கேக்குறதுக்கு ரொம்ப யோசனையாக இருக்கும்…. அந்த டயலாக் என்னன்னா….  என்னம்மா கண்ணு சௌக்கியமா ? இதை எங்கேயாவது போயி,  நான்  என்னம்மா கண்ணு சவுக்கியமா?  அப்படின்னு கேட்டு..  யோவ் நாங்க இப்ப சவுக்கியம் இல்லை என கேட்டா நான் என்ன பண்றது ? ஆனால் இந்த சைதை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கீழ் இயங்கும் இவ்வளவு தொழிலாளர் தோழர்கள் மத்தியில் என்னம்மா கண்ணு சவுக்கியமானு  தைரியமா கேட்கலாம்….  ஏன்னா நீங்க எல்லாம் ஆமாமா கண்ணு சௌக்கியம் தான் என சொல்லுவீங்க என தெரிவித்தார்.