ஊழல் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், திமுக அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. இந்தநிலையில், ஆரியலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, போக்குவரத்து துறையில் ரூ.32,059 கோடி மதிப்பிலான ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை அமைச்சர் சிவசங்கர் பிடித்து இருக்கிறார். தகுதியற்ற போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,276 கோடி, சோதனை இயந்திரம் வாங்கியது மூலம் ரூ.3783 கோடி ஊழல் செய்துள்ளார். இதில் உண்மை இருப்பதால்தான் திமுக சைலன்டாக இருக்கிறது” என்று பெரும் குற்றச்சாட்டை வைத்து அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.