வேலூரில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இளைஞர்களுக்கு கட்சியில் முக்கிய பங்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம் என்றும், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இளைஞர்களின் புதிய சிந்தனை மற்றும் ஆற்றலை கட்சியில் இணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், கட்சியை இன்னும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்றும் துரைமுருகன் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதாவது இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நாம் அவர்களுக்கு நிச்சயம் வழிவிட வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் அமைச்சர் துரைமுருகன் திமுகவிலிருந்து விலகுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே முதல் மதிப்பெண் வாங்கிய பழைய மாணவர்கள் இன்னும் வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு இளைஞர்களுக்கு வழி விடாமல் வயதான பிறகும் இன்னும் கட்சியில் நீடிக்கிறார் என்று மறைமுகமாக கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் கூட வரவேற்பு கொடுத்தனர். அதாவது மூத்தவர்கள் கண்டிப்பாக இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பது போல் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனால் சமீப காலமாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சி மேலிடம் இடையே பூசல்கள் இருப்பதாக கூட தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அமைச்சர் துரைமுருகன் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் எனவும், நாம் அதற்காக விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதன் மூலமாக அவர் இளைஞர்களுக்கு வழி விடுவதற்காக கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. அதாவது பதவிகளை வேண்டாம் என்று மறுத்து வெறுமனை அரசியலில் மட்டும் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் துரைமுருகன் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கூறிய நிலையில் அது எந்த அளவுக்கு உண்மை என்பது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தான் தெரிய வரும். இருப்பினும் அவருடைய கருத்து அரசியல் வட்டாரத்திலும் திமுகவினர் மத்தியிலும்  வரவேற்பை  பெற்றுள்ளது.