சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மூடநம்பிக்கை குறித்து மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு என்பவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் வலுத்தது. இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மகாவிஷ்ணு பேசிய வீடியோவை x பக்கத்தில் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தாய் மகன் உறவு குறித்தும் கடவுள் முருகப்பெருமான் குறித்து மிகவும் கொச்சையான முறையில் பேசி உள்ளார். குறிப்பாக முருகப்பெருமான் பற்றி அவதூறாக பேசியது இந்து மதத்தினர் மற்றும் ஆன்மீகவாதிகள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புனிதமான தாய் மகன் உறவு பற்றியும் அவர் மிகவும் கொச்சையான முறையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.