செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, போலியாக  நீங்க சமூக நீதி பேசினா போதுமா ? ஜாதி ஒழிப்பு பற்றி பேசினால் போதுமா ? அதுக்கான ஒரு ஸ்டேப் நடவடிக்கை எடுக்க வேண்டாமா ? ஜாதியை ஒழிப்பதற்கு, ஜாதிய வேறுபாடுகளை கலைவதற்கு…  சாதி ரீதியான கொலைகள், ஜாதி ரீதியான தாக்குதலை தடுப்பதற்கு, நடவடிக்கை ஏதும் எடுக்காமல்..  வெறுமனே நீலி கண்ணீர்  வடித்து என்ன பயன் ? அதுதான் நான் இங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள்.

நாங்குநேரி பிரச்சினை என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சாதிய பிரச்சனைகளுக்கு ஒரு சின்ன அடையாளம். இது மாதிரி கீழே இருக்கக்கூடிய எல்லா பிரச்சனையும் நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்றால் ? ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கணும். முதல்ல திமுக மனசாட்சியோடு…  சாதியை ஒழிப்பதற்கு…  சாதிய  வேறுபாடுகளை களைவதற்கு  பாடுபடுமே தவிர, 2024 நாடாளுமன்ற தேர்தலில் மனதில் வைத்து….

தமிழகத்தில் இன்னைக்கு திமுகவினுடைய செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. 2024 வெற்றி பெற முடியாது. எனவே தமிழகத்தில்  பல்வேறு சமுதாயங்களுக்கிடையே சாதிய மோதல்களை உருவானால்தான் அதிலே குளிர் காய முடியும். அதிலே வாக்குகள் வாங்க முடியும் என்று கணக்கிட்டு இந்த அரசியல் செயல்படுகிறதோ…  என்று பல்வேறு தகவல்கள் எங்களுக்கு வருகின்றது. ஒரு அஜண்டாவோடு இந்த அரசு செயல்படுவதாகவே தெரிகிறது. இதெல்லாம் ஒரு தூண்டுதலோடு நடக்கின்றது, தன்னெழிச்சியாக நடைபெறவில்லை. திமுகக்கு  தேர்தல் அஜெண்டாவோடுதான்  இந்த பிரச்சனைகளை  எல்லாம் அவங்க வளர விடுகிறார்கள் அல்லது துவ விடுகின்றார்கள் என்றே கருத வேண்டி உள்ளது என தெரிவித்தார்.