மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் (Gwalior), ஒரு தங்க நகை வியாபாரிக்குச் சொந்தமான ₹20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பெட்டி, அவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரில் இருந்து தற்செயலாகக் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில், ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஸ்கூட்டரில் சென்ற நகை வியாபாரி, தனது ஸ்கூட்டரில் இருந்து பிங்க் நிற கேரி பேக் ஒன்று கீழே விழுந்ததை அறியாமலேயே சென்றுவிட்டார்.
View this post on Instagram
சில வினாடிகளுக்குள், எதிர்த்திசையில் வந்த இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்த அந்தப் பையை எடுத்து, அதனுள் தங்கம் இருப்பதை உறுதிசெய்த பிறகு, அதே ஸ்கூட்டரில் அவசரமாகத் தப்பியோடினர்.
தங்கம் காணாமல் போனதைக் கண்டறிந்த நகை வியாபாரி உடனடியாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போது, அவர்களைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நகைகள் மீட்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
