
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாடப் புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் கிடையாது. உள்ளூர்ல பேர் வைச்சா கூட கலைஞர் கருணாநிதியோட பெயர் வைக்கிறங்க. கோபிசெட்டிபாளையத்தற்கும், கலைஞர் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ? லட்சுமண ஐயர் உடைய பெயர் ஏன் இல்ல ? கொடிகாத்த குமரனுடைய பெயர் இத்தனை நாளா…. இருட்டடிப்பு பண்ணி, ரயில்வே ஸ்டேஷனுக்கு வைக்கிறோமானு இன்னைக்கு கிளம்பி இருக்காங்க…
பாரதிய ஜனதா கட்சி அறிக்கை கொடுத்த பிறகு, இன்னைக்கு கிளம்பி இருக்காங்க. அதே போல கொங்கு பகுதியில் பாடுபட்ட எத்தனை மனிதர்கள் இருக்கிறாங்க. பாசனம் தந்த ஈஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து, காளிங்கராய வரை பேசிட்டே போலாம். எந்த பெயரும் இருக்காது. நுழைவாயில் என்றால் ? திமுகவில் மூன்று பேருடைய பேர். திரும்பத் திரும்ப வைப்பாங்க… சமீபத்தில் நாமக்கலில் ஒரு பெயர் வைப்பதற்கு ஆரம்பித்தாங்க.
நாமக்கல் பேருந்து நிலையம் இந்த தலைவருடைய பெயர், அண்ணாதுரை அவர்களுடைய பெயர். இரண்டு வளைவுகள் இருக்கு. ஒரு வளைவுக்கு அன்பழகன் அவர்களுடைய பெயர். இன்னொரு வளைவுக்கு இன்னொரு திமுக தலைவர் உடைய பெயர். ஏன் ? அங்க கவிஞர் ராமலிங்கம் இல்லையா ? அந்த ஊர்ல வேற எந்த தலைவரும் இல்லையா ? தீரன் சின்னமலை இல்லையா? அதனால் ஆளுநர் அவர்கள் சரியான நேரத்தில்… அந்த கருத்தை சொல்லி இருக்காங்க என தெரிவித்தார்.