அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,   ஏழைகளுக்காக திட்டத்தை தீட்டி செயல்படுத்துகின்ற அரசு அண்ணா திமுக அரசு. நான் அரசாங்க பள்ளியிலேயே படித்தவன்…  எதிர்க்கட்சி கோரிக்கை வைக்கல, பொதுமக்கள் கோரிக்கை வைக்கல, அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் 41 சதவீதம் பேர் கிட்டத்தட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவச் செல்வங்கள் கனவு மருத்துவராக வேண்டும். பல் மருத்துவராக வேண்டும்.

குடும்ப சூழ்நிலை காரணமாக முடியாத ஒரு சூழ்நிலை.  2018 – 19 தமிழகத்தில் 3145 மருத்துவ இடங்கள்.. அதிலே அரசு பள்ளியில் படித்த 3 லட்சம் 80 ஆயிரம் மாணவர்களில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள்  தான் அதிகமான பேரு. அரசு பள்ளியில் படிக்கின்றார்கள்…  விவசாய தொழிலாளிகள்… கூலித் தொழிலாளிகள்… இப்படி அடிமட்டத்திலே வாழ்கின்ற அந்த குடும்பத்தில் பிறந்து மாணவச் செல்வங்கள் தான் அரசு பள்ளியிலே படிக்கின்றது…

அந்த மாணவனுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் ஏற்றி அமல்படுத்தப்பட்டு,  நிறைவேற்றினோம். அதோடு நிக்கவில்லை….  அந்த ஏழை மாணவன் மருத்துவரிடம் 7.5 உள் ஒதுக்கீட்டில் இடம்  கிடைத்தாலும்  மருத்துவ கல்வி கட்டணம் செலுத்த முடியல…

என் கவனத்திற்கு வந்தவுடன்,  அம்மாவினுடைய அரசு அந்த 7.5 உள் ஒதுக்கீடு இடத்தில் மருத்துவ தேர்விலே இடம் கிடைத்த மாணவனுக்கு அரசாங்கமே முழு செலவையும் ஏற்றுக்கொள்ளும் அதை நாங்கள் நிறைவேற்றி கொடுத்தோம். இதுதான் ஏழைகளுக்கு செய்கின்ற திட்டம்.. இதன் மூலமாக இதுவரை… இந்த ஆண்டு வரை 2160 மாணவ மாணவிகள் இந்த 7.5 உள் ஒதுக்கீடு இடத்தின் மூலமாக இன்றைக்கு மருத்துவர், பல் மருத்துவராக படித்துக் கொண்டிருக்கின்ற காட்சி அண்ணா திமுக ஆட்சியில் வந்தது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.