டெல்லி-என்.சி.ஆர். (Delhi-NCR) பகுதிகளில் நிலவும் அதிக காற்று மாசுபாடு (Air Pollution) காரணமாக, நொய்டாவைச் (Noida) சேர்ந்த ஒரு தாயின் குழந்தையின் உடல்நலம் மோசமடைந்து, அறுவை சிகிச்சை (Surgery) செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக்‌ஷி பஹ்வா (Sakshi Pahwa) என்ற அந்தத் தாய், இன்ஸ்டாகிராமில் (Instagram) ஒரு வீடியோவைப் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Pahwa (@baby.khrisha_jayrit)

அவர் தனது குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லிப் பகுதிக்கு வந்ததாகவும், அன்றிலிருந்து தனது சிறு குழந்தை தொடர்ந்து சளி, இருமல், அலர்ஜி (Allergy) மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றால் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மருந்துகள் மற்றும் மருத்துவர்களை மாற்றியும் பலன் கிடைக்காத நிலையில், நிலைமை மோசமடைந்து மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

“நாங்கள் வரி செலுத்துகிறோம்; ஆனால் பதிலுக்கு எங்கள் குழந்தைகள் விஷம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறார்களா?” என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ள சாக்‌ஷியின் வீடியோ, டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள மாசுப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.