கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதற்கட்டமாக நிதி கொடுக்கிறார்கள்…. நீங்க ஆய்வே செய்யலையே…… நீங்க  ஆய்வு செஞ்சு இருந்தா தானே….   சாலை பதிப்பா நெடுஞ்சாலை துறையிலிருந்து எவ்வளவு ? மின்சாரத் துறையில் சேதம் எவ்வளவு ? இப்படி மக்களுக்கு என்னென்ன வகையில் சேதம் வந்திருக்கிறது…

இதையெல்லாம் கணக்கிட்டு,  ஒரு அறிக்கையாக மத்திய அரசிடம் கொடுத்தால் தான் அந்த மத்திய அரசு இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து அதற்கு தேவையான நிதி உதவி செய்வாங்க. ஆனால் இது  ஒரு விளம்பர அரசாங்கம். மக்களுக்காக ஆட்சி செய்யுற அரசாங்கம் இந்த அரசாங்கம் இல்லை. வீட்டு மக்களுக்காக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் தான் இன்றைக்கு இருக்கின்ற திமுக அரசாங்கம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு மக்களுக்கு தேவையான நிவாரணத்தை மத்திய அரசிடம் இருந்து முறையாக ஆய்வு செய்து கொடுக்காத காரணத்தினால் ஒரு தோராயமாக இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பேசுவது  வெட்கக்கேடானது. மக்களை தூத்துக்குடியில் போய் பார்த்தோம்…. திருநெல்வேலியில் வந்து பார்த்தோம்…. பல ஊடக நண்பர்கள் எல்லாம் வந்தீங்க….

பத்திரிக்கை நண்பர்கள் வந்தாங்க…. மூணு நாளா எங்களுக்கு சாப்பாடு கிடைக்கல….. தண்ணின்னு நிறைஞ்சிருக்குது….. பல வீட்ல இன்னும் இடுப்பு அளவு  தண்ணீர் இருக்குது…. எங்களுக்கு உணவு கிடைக்கல…. பால் கிடைக்கல….. எங்களுடைய உடைமைகள் எல்லாம் சேதம் அடைந்து விட்டது….  இதை பார்வையிட எவரும் வரவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் தெரிவிக்கிறார்கள்.  அதேபோல இன்னைக்கு தூத்துக்குடி பகுதியில் எல்லாம் பார்த்தீங்கன்னா கனமழை பொழிந்து இருக்கிறது. தூத்துக்குடி கடற்கரை ஓரமாக இருக்கின்ற உப்பளங்கள் எல்லாம் கடுமையாக சேதம் அடைந்திருக்கிறது.  ஆகவே அந்த உப்பளங்களையும் இந்த அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி கணக்கிட்டு பாதிக்கப்பட்ட உப்பல தொழில் செய்பவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.

ஆளுங்கட்சி தான் பிரதமரை சந்திக்கணும். நாங்க சந்திச்சு என்ன பண்ண முடியும் ? ஒரு ஆளு கட்சியாக இருந்தால்….  அந்த ஆளுங்கட்சியில அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் என்னென்ன சேதம்  என்று கொடுத்தா தானே மத்திய அரசு கொடுக்கும்…..  நாங்கள் எதை வைத்து கொடுக்க முடியும்….  பத்திரிக்கையில் வருகின்ற செய்தி….  ஊடகத்தில் வர செய்தி….  மக்கள் கொடுக்கின்ற கருத்து இதை வச்சுதான் நாங்க உங்க முன்னால பேட்டி கொடுத்துட்டு இருக்கோம் என தெரிவித்தார்.