மும்பையில் இணையத்தை அதிரவைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு போலீஸ்காரர் செய்த தவறுக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடி அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளனர்.
பணியில் இருந்த அந்த போலீஸ்காரர், அங்கிருந்த ஒரு நாயை தனது லத்தியால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த நாய்க்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Have you seen Policeman doing sit ups? It happens in Maharashtra pic.twitter.com/HzOIy9vcmd
— Defence Brat (@DefenceBrat) February 6, 2026
இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் ஆவேசமடைந்து, போலீஸ்காரரைச் சூழ்ந்து கொண்டனர். “யுனிஃபார்ம் போட்டிருக்கீங்க என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா?” என்று அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
கோபமடைந்த மக்கள், அந்த போலீஸ்காரரை நடுரோட்டிலேயே தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள். “இனிமேல் நாய்கள் மீது கை வைக்க மாட்டேன்; என் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அவர் தோப்புக்கரணம் போட்டார்.
அத்துடன் விடாமல், அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து அவர் மன்னிப்பு கேட்ட காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
