உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் (Baghpat) மாவட்டம், பாரத் நகரில், 18 வயது தருண் சைனி என்ற இளைஞர் உயிருள்ள டிரான்ஸ்ஃபார்மர் (Transformer) கம்பியைப் பிடித்துத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞன் மின் கம்பியைத் தொட்ட அடுத்த நொடியே, தீப்பிழம்புடன் கூடிய பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது அந்தக் காட்சி.

சிசிடிவி காட்சிகளின்படி, தருண் சைனி முதலில் மொபைல் போனைப் பார்த்தபடியே நடந்து வந்ததாகவும், பின்னர் அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, எந்த தயக்கமும் இல்லாமல் டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி உயர்மின்னழுத்தக் கம்பிகளைப் பிடித்ததாகவும் தெரிகிறது.

மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி, சடலமாக அங்கேயே தொங்கினார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், மின் இணைப்பைத் துண்டித்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை என்று தருணின் குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், போலீசார் தற்கொலைக்கான நோக்கத்தை அறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.