உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் (Agra), ஒரு மனிதர் தன் தலைக்குள் பனிக்கட்டி உடைக்கும் உளியுடன் (Ice Pick) சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து மருத்துவமனைக்குச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தலையின் பின்பகுதியில் அந்த நீளமான உளி ஆழமாகச் செருகிய நிலையில், அவர் சற்றும் சலனமின்றி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
जिला आगरा के थाना न्यू आगरा क्षेत्र आबू लाला दरगाह के पास दो बाइक सवार युवकों ने एक सचिन शर्मा नाम के सर में सूजा घोंप कर भाग निकले।
मौके पर पुलिस के आने पर पुलिस ने अस्पताल न पहुंचने की बात युवक ने बताई और युवक के परिजन स्वयं अस्पताल लेकर आए। pic.twitter.com/l5Ob6NliWN
— Adv Deepak Babu (@dbabuadvocate) November 24, 2025
தலையில் உளி செருகிய நிலையில் அவர் நடந்தே மருத்துவமனைக்குச் சென்றது, அவரது தைரியத்தையும், உயிர் பிழைக்க அவர் நடத்திய போராட்டத்தையும் காட்டுகிறது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் (விபத்தா அல்லது தாக்குதலா) குறித்த முழுத் தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்த அபாயகரமான காட்சி அங்கிருந்தவர்களையும், வீடியோவைப் பார்ப்பவர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
