உத்தரப்பிரதேசத்தில் நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த ஒரு பிரியாணி கடையைத் திறந்த உரிமையாளருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கடையினுள் இருந்த ப்ரீஸரைத் திறந்தபோது, அதில் விஜய் பால் என்பவர் சடலமாக இருப்பதைக் கண்டு அவர் உறைந்து போனார். உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், அவர் மது போதையில் தெரியாமல் ப்ரீஸருக்குள் படுத்திருந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
