சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதில் ஒரு இளைஞர், தனது புல்லட் பைக்கை ஒரு படகாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பைக்கின் முன் சக்கரத்தை அகற்றி, அதற்கு பதிலாக ஒரு டின் டிரம்மையும், அதேபோன்று பின் சக்கரத்தை கழற்றி, அதற்கு பதிலாக 2 பெரிய டின் டிரம்முகளை பொருத்தியுள்ளார். பின்னர், அந்த டிரம்முகளை கயிறுகளின் உதவியுடன் நீரில் விட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jugadu Family (@jugadufamily)

தொடக்கத்தில் இந்த ஃபக் படகு நல்லா வேலை செய்யும் மாதிரி தெரிகிறது. பைக், படகு மாதிரி நீரில் மிதந்து செல்கிறது. சில பசங்க அந்த ஃபக் படகில் உட்கார்ந்து குஷியாக பயணிக்கிற மாதிரி சிரிப்புடன் பார்க்கமுடிகிறது. ஆனா விஷயம் இங்கேதான் மாறுகிறது, அதாவது கடைசி கட்டத்தில் அந்த பைக் தண்ணீருக்குள் மெதுவாக மூழ்க ஆரம்பிக்கிறது. பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இது உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய ஒன்று என்பதையும் இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோவை jugadufamily என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் லைக் செய்துள்ளதுடன், பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். “உயிருக்கு ஆபத்தான ஃபக் படகு வேண்டாம் நண்பா!” என்றும், “அடுத்த முறை பண்ணும் முன் 100 தடவை யோசிப்பார்” என்றும் சிலர் எழுதியுள்ளனர்.