இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனமாக மாற்றி, அதில் கட்டிலைப் பொருத்தி ஒருவர் சவாரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாகனத்தில் இருந்த BR30A07548 என்ற பதிவு எண்ணைக் கொண்டு, இந்தக் காணொளி பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த நபர், இரண்டு சக்கரங்கள் கொண்ட பைக்கின் பின்புற டயருடன் கூடுதலாக மேலும் இரண்டு டயர்களை இணைத்து, அதன்மீது ஒரு தளத்தை உருவாக்கி அதில் கட்டிலை வைத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Manish Kumar (@manish_sharma_5248)

அந்தக் கட்டிலில் அமர்ந்தபடி அவர் வாகனத்தை இயக்கும் இந்த திறமையான காட்சி, இணையவாசிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கலைத்திறன் கொண்ட நபர் மாற்றுத்திறனாளி என்பதால், அவரது புதுமையான முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த முறையில் வாகனத்தை இயக்குவது போக்குவரத்து விதிகளை மீறிய செயல் ஆகும். ‘@manish_sharma_5248’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும், 44,000க்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.