சமூக வலைதளங்களில் வாய்க்காலே இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இணையவாசிகள் பலரும் தொடர்ந்து பரிமாறி வருகின்றனர். இதற்கு பலரும் தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரி பார்ப்பகம் இந்த புகைப்படத்தின் உண்மையான தகவலை கண்டறியும் ஆய்வில் முழு வீச்சாக இறங்கியது.

இதன் பின்னர் இது குறித்து தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, வாய் கால் செல்லாமல் வெறும் மண் தரையில் கட்டப்பட்டுள்ள பாலம் குறிப்பான புகைப்படங்கள் முற்றிலும் பொய்யானது. இது மாதிரியான பாலங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. தென்னாப்பிரிக்காவில் கியானி நகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இதனை தமிழ்நாட்டில் உள்ளது என மாற்றி பொய்யான வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி என்று கியானி நகராட்சி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஆகும் என்று விளக்கம் அளித்துள்ளது.