மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்பட்டதும் அதிக அளவு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த மருந்து கடைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வழி நிவாரணி மாத்திரைகளை போதை பொருட்களாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் மருந்து சீட்டு இல்லாமல் மன நோய்க்கு ஊக்க மாத்திரை, வலி நிவாரணி மாத்திரைகள் விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.