சீனா முதல் ஹாங்காங் வரை தாறுமாறாக தாக்கி வரும் சூப்பர் தாய்பூன் ராகசா புயலால், உயிரிழப்புகள், காயமடைந்தோர், மற்றும் பலர் காணாமல் போனதுடன், மக்காவ் மொத்தமாக ஒரு குளமாக மாற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
After #TyphoonRagasa, seawater flooded #Macau streets — now residents are wading in and catching fish like it’s a giant pond. #typhoon pic.twitter.com/PUNYZGE8MT
— Shanghai Daily (@shanghaidaily) September 24, 2025
கடல்நீர் வீதிகளில் புகுந்து ஓட, மக்கள் ரோடுகளிலேயே மீன் பிடிக்கும் அதிசயமான காட்சிகள் நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. மக்கள் வீதிகளில் வலைகளும், பிளாஸ்டிக் பைகளும் கொண்டு வெள்ளத்தில் மிதந்து வரும் பெரிய மீன்களைப் பிடிக்க முயலுகின்றனர்.
சிலர் சைக்கிள்களில் மீன்களை ஏற்றிச் செல்லும் காட்சியும், சிலர் தாங்கள் பிடித்த மீன்களுடன் செல்ஃபி எடுக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. Shanghai Daily பகிர்ந்த இந்த வீடியோ X தளத்தில் வைரலாகி உள்ளது. “ராகசா புயலால் மக்காவின் வீதிகள் கடலாக மாறி விட்டன.
மக்கள் ரோடுகளில் நனைந்து மீன் பிடிக்கின்றனர்; இது ஒரு பெரிய குளமாகவே தெரிகிறது!” என அந்த வீடியோவின் விளக்கம் எழுதியுள்ளனர். இவ்வீடியோக்கு 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளதுடன், பலரும் நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
