கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் நடப்பு சட்டசபை தேர்தலில் 147.46 கோடி ரொக்கம், 83.66 கோடி மதிப்புள்ள மதுபானம், 23.67 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் மற்றும் 96.20 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 24.21 கோடி மதிப்புள்ள இலவசங்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.