இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 125 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பதவி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த மோசமான தோல்விக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரை முற்றுகையிட்ட ரசிகர்கள்உலகக்கோப்பையை வென்று கொடுத்து தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கக் கோரி “வி வாண்ட் சஞ்சு” என கோஷமிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர்.
🚨 Indian Fans when they saw Gautam Gambhir and Tilak Varma 🗣️
‘We want Sanju’, ‘We want Sanju’ chants, when fans saw Gautam and Tilak outside the stadium as many fans are now frustrated with their decisions 🤪pic.twitter.com/eOPGj3APgO
— Ajay Jadeja (@AjayJadeja171) July 8, 2026
“>
இதுகுறித்து விளக்கமளித்த பயிற்சியாளர் கம்பீர், சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து அவரிடம் தெளிவாகப் பேசிவிட்டதாகவும், அது தங்களுக்குள் நடந்த தனிப்பட்ட விவாதம் என்பதால் வெளியில் கூற முடியாது என்றும், கடந்த கால பங்களிப்பை விட தற்போதைய ஃபார்ம் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
