அர்மேனியாவிலிருந்து ஜார்ஜியாவுக்குள் நுழைய முயன்ற 56 இந்திய பயணிகள், அந்நாட்டு அதிகாரிகளால் மோசமான முறையில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விஷயத்தைத் த்ரூவி படேல் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “எங்களிடம் அனைத்து சரியான ஆவணங்கள் இருந்தும், 5 மணி நேரத்துக்கும் மேலாக குளிரில் நம்மை காத்திருக்க வைத்தனர். சாப்பாடு இல்லை, கழிவறை வசதியில்லை,” என அவர் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dhruvee Patel (@pateldhruvee)

அதிகாரிகள் எந்தவிதமான தகவலும் இல்லாமல், இந்திய பயணிகளின் பாஸ்போர்டுகளை 2 மணி நேரத்துக்கும் மேலாக கைப்பற்றி வைத்ததாகவும், “மாடுகளைப் போல் பாதையில் உட்கார வைத்தனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர்களை குற்றவாளிகளைப் போல வீடியோ எடுத்ததாக என்றும் கூறியுள்ளார். அதிகாரிகள் ஆவணங்களை சரியாக சோதிக்காமல், “தவறான வீசா” என கூறி நுழைய தடை விதித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அர்மேனியா-ஜார்ஜியா எல்லையான சடாக்லோ பகுதியில் நடைபெற்றுள்ளது. த்ரூவி படேல் தனது பதிவை, “இந்தியர்களை ஜார்ஜியா இப்படி தான் நடத்துகிறது  மிகவும் அவமதிக்கத்தக்கது” எனக் கடும் விமர்சனத்துடன் முடித்துள்ளார். இதற்குப் பிறகு, பலரும் தங்களது நிலைகளை பகிர்ந்துள்ளதோடு, ஜார்ஜியாவிடம் இந்தியர்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான நடத்தை நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை இதுவரை எந்தவிதமான விளக்கமும் வழங்கவில்லை.