சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கண்டது நம்முடைய  வரலாறு. கொம்பாதி கொம்பர்கள் எல்லாம் அப்படின்னு சொல்லப்பட்டவங்க…..  அவங்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்று இருக்கோம். இந்த இயக்கத்தை அழிச்சிடலாம் என்று நினைத்தவுங்களுடைய எண்ணம் தான் அழிச்சிருக்கு.

திமுகவை உங்களால் கற்பனையில கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை குழி தோண்டி புதைப்பேன், வேரோடு வேரடி மண்ணோடு புதைப்பேன்னு சொன்னது யாருன்னு கேட்டா ?  யாருக்கும் தெரியாது.  திராவிட இயக்கத்தை ஒழிக்கிறதை தவிர,  வேற இல்லைன்னு சொன்ன பல பேரு கடைசில இங்க தான் வந்து அடைக்கலமானாங்க,  இது தான் வரலாறு.

ராஜாஜி, மா.போ.சியும் இந்த இயக்கத்தை தொடக்க காலத்தில்  எதிர்த்தாங்க. ஆனால் 1967இல்  திமுகவை ஆதரிச்சார்  ராஜாஜி.   உதயசூரியன் சின்னத்தில் மயிலாப்பூரில் போட்டியிட்டார் மாபோசி. அந்த தலைவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கொள்கை இருந்துச்சு என தெரிவித்தார்.