சாப்பாட்டுக்காக சாதாரண கரண்டி போதாதென நினைத்தாரோ என்னவோ, ஒரு நபர் ஜெசிபி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தைக் கொண்டு ‘தால் மக்கனி’ கிளறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. நிரஜாத் நிரஜாத் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இதனை ஜூலை 7ம் தேதி பதிவேற்றியுள்ளார்.

 

வீடியோவில், சாதாரணமாக சாலையை தோண்டும் மஞ்சள் நிற ஜெசிபி இயந்திரம், ஒரு பெரிய அளவுள்ள பாத்திரத்தில் குழம்பை கிளறுவதுபோல் காணப்படுகிறது. இந்த ‘புதிய கண்டுபிடிப்பு’ எங்கே நடந்தது, யாரால் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் வீடியோ இணையத்தில் வேகமாக பரவ, பலர் அதிர்ச்சி*,அருவருப்பு, அமைதியான சிரிப்பு என பல்வேறு உணர்வுகளுடன் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

“இப்போ ரோடு ரோலர் வச்சு சப்பாத்தி செய்யுறதா?” என்று ஒருவர் சாட, “இது தால் மக்கனி இல்லை என வேடிக்கையாய் கூறியுள்ளார். இந்நிலையில், சிலர் இது உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறுகிறது எனக் கேள்வி எழுப்பினாலும், மற்றொருவர் “இது புது ஜெசிபி, ஒருமுறை கூட தோண்டப் பயன்படுத்தல” என பாதுகாப்பு தரப்பில் குரல் கொடுத்திருக்கிறார்.