செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஃபர்ஸ்ட் காவிரி எங்க ஆரம்பிக்குது ?  குடகுல ஆரம்பிக்குது. தலை காவேரி என்றுஅதுக்கு பெயரு. அது ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் தமிழ்நாட்டோடு இணைந்த பகுதி.  பொன்னியின் செல்வன் என்று ஏன் சொல்கின்றோம் ? அந்த காவிரியில் இருந்து உயிர் பிழைத்து ராஜராஜ சோழன் தப்பி வந்ததுனால, அந்த குடகு மலைக்கு பொன்னி என்று பெயர். காவிரியில் அவர் உயிர் பிழைத்ததனால தான் அவருக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்.

அப்போ தமிழ்நாட்டுக்கு சேர்ந்த பகுதி. இது பிரிந்து அரசியல் சூழ்ச்சியினால் கர்நாடகாவுக்கு போயிடுச்சு. இப்படியே நாம உரிமைகள்  ஒவ்வொன்றும் விட்டுக் கொடுத்துட்டு இருந்தா என்ன இருக்கு ? அங்க பாத்தா கச்சத்தீவை விட்டுக் கொடுத்தாச்சு. இந்த பக்கம் பார்த்தா குடகுவை விட்டு கொடுத்தாச்சு. அப்போ தமிழ்நாட்டுக்கு என்று இருக்கின்ற அத்தனையும் நாம் விட்டுக் கொடுத்துவிட்டு,

சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளால் தான் இன்னைக்கு தமிழ்நாடு பாலைவனமாக மாறி இருக்கே ஒழிய,  இதுல வேற எந்த மாற்று கருத்தும் இல்லை. இது தொடரக்கூடாது. நிச்சயமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை….  நிச்சயமாக உச்ச நீதிமன்றமும் சரி,  மத்திய – மாநில அரசுகளும் வாங்கிக் கொடுத்து…  ஒரு விவசாயி கூட இனிமே தமிழ்நாட்டு பூமியில் இறக்கக்கூடாது. அதுதான் இன்னைக்கு உண்ணாவிரத போராட்டத்தின் மிக முக்கியமான ஒரு விஷயம். அத்தனை விவசாயிகளும் வாழ்ந்ததாக சரித்திரம் இருக்க வேண்டும்.

நேற்று ராஜ்குமார் அவருடைய மனைவியிடம் நான் பேசுறேன்..  எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவுமே இல்லை. எல்லாமே காஞ்சி போச்சு. ஏற்கனவே பல லட்சம் நாங்க கடனாக இருக்கோம் என    அந்த அம்மா சொல்றாங்க. நான் தமிழக அரசுக்கு கிட்ட கேட்டுக்கிறது…  அந்த குடும்பத்திற்கு உரிய நிதியையும்,  அவர்களுக்கு ஒரே ஒரு பையன். அவன் கல்வி உதவியும்,  அந்த அம்மாவுக்கு கவர்மெண்ட்ல ஒரு ஜாப் கொடுத்து,  அந்த குடும்பத்தை காப்பாத்தணும்.

இன்னைக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம் என சொல்றாங்க. அதனால யாருக்கு ? என்ன பலன் ? அவங்க சொல்றாங்க…  எங்கேயாவது….   ஏதாவது ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கா ? தஞ்சாவூர சுத்தி…  எந்த இண்டஸ்ட்ரியும் இல்லை. எல்லாமே நம்பி இருக்கிறது விவசாயத்தை….  விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் இருந்தால் எப்படி ?   விவசாயம் சிறப்பா இருக்கும். இந்த மாதிரி ஒரு நிலைமை இனி வருங்காலங்களில் இருக்கக் கூடாது என்பதை இந்த நேரத்திலே நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.