செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  நம்ம ஜெயக்குமார் ஒன்னு பேசுறது…. செல்லூர் விஞ்ஞானி இருக்காரே அவர் பெயர் ? என்ன ராசு… அவர் ஒன்னு பேசுறது. நாங்க ஒட்டி வைக்கலைனா நெல்லிக்காய் மூட்டை சார். அனாவசியமாக எல்லாம் பேசக்கூடாது. அவர் பொறுப்பில் இருந்தாருன்னு சொன்னால் அதற்கு பாரதிய ஜனதா கட்சி காரணம் என்பதை அவர் மறந்தார். நன்றி மறந்தவர்…  ஏன்னா…  அதிமுக அன்னைக்கு நெல்லிக்காய் மூட்டை.

கயிறு போட்டு  அதை கட்டி புடிச்சு வச்ச எங்க கை எவ்ளோ வலிச்சிருக்கும் என எங்களுக்குள்ளா  தெரியும். இங்க ஒரு பக்கம் ஒன்னு பேசுனாங்க. அதுக்கு பதில சொல்ல…  அவங்க கேட்குறதுக்கு பதில் சொல்ல.  ஓபிஎஸ் அவர்களை  கூட்டிட்டு வந்து உங்களுக்கு முன்னாடி உக்கார வைக்க…  நான் இருந்தேனே…  என்ன ? இதுக்கெல்லாம் சாட்சியாக கூடவே இருந்து இருக்கேன்.

அதனால அவங்க ரொம்ப பெரிய சாதனை பண்ணிட்டோம்னு நினைச்சுக்க வேண்டாம். Time Will Tel.  நாளைக்கு நடக்க போற தேர்தல் பாராளுமன்றத்துக்கானது. மாநிலத்தில் ஆளுங்கட்சியா திமுக இருக்கு. மத்தியில ஆளுங்கட்சியா பிஜேபி இருக்குது. Where is AIADMK?  அதனால முடிந்தது… முடிந்தது… முடிந்தது என்றால் ? அதிமுக இன்றோடு முடிந்தது. அப்படித்தான் எடுத்துக்க முடியும் என தெரிவித்தார்.