செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் சார்ந்த பூமி இது. இன்னைக்கு தஞ்சையில் ராஜராஜ சோழன் ஆண்ட இந்த பூமி நெற்களஞ்சியமாக இருந்த பூமி… எத்தனையோ இலட்சக்கணக்கான ஏக்கர்ல பயிர் செய்த பூமியில், இன்றைக்கு தண்ணீர் இல்லாமல்….  டெல்டா பகுதி முழுக்க பாலைவனமாக மாறி இருக்கிறது என்றால் ? உண்மையிலேயே நாம் அனைவரும் தமிழர்களாக தலை குனிந்து,  வெட்கப்பட வேண்டிய ஒன்று நிலை இது.

நிச்சயமாக விவசாய மக்களுக்கு அனைவருமே உறுதுணையாக இருந்து,  எல்லோருமே அவர்களுக்கு சப்போர்ட்டா இருந்து…  விவசாயிகள் வாழ்ந்தால் தான் இந்த நாடு வாழும் என்பதுல எந்த மாற்று கருத்தும் இல்லை. அதனால நிச்சயமாக எங்கள் கட்சியின் சார்பாக விவசாய மக்களுக்காக நாங்கள் எடுத்த உண்ணாவிரத போராட்டம் அவர்களுக்கானது தான்.

உணவளிப்பவர்கள் அவங்க. அவர்களுக்காக இன்னைக்கு ஒரு நாள் முழுவதும் நாங்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து அந்த விவசாயிகளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம்,  கேப்டன் ஆணைக்கிணங்க என்றைக்கும் உறுதுணையாக இருப்போம் என்பதை இந்த நேரத்துல சொல்கிறேன். இதற்கான நிரந்தர தீர்வு நிச்சயம் காண வேண்டும் என்பதை தமிழக முதல்வருக்கும்,  பிரதமருக்கும்,  மத்திய –   மாநில அரசுகளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்த உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

காவேரி விவகாரம் உடனடியாக தீர்க்கப்படணும். ஏன்னா இன்னும் தொடரக்கூடாது. ஏனென்றால் டெல்டா வரைக்கும் காய்ந்து  போச்சு. பாலைவனமாக மாறிப்போச்சு. அப்போ என்ன இருக்கு இங்க ? என்று தான் கேள்வியாக இருக்கிறது.  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும்,  அதேபோல பிரதமர் அவர்களும் உடனடியாக இதுல தலையிட்டு…  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.