செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு ஐடியாலஜிக்கல் பேஸ்ல நான் சொல்லும்போது….  ஒரு சமாதான தர்மத்தை  பேசுறோம். கோவில்லை பேசுறோம். யார் நம்புனாங்கன்னு பேசுறோம்… யார் நம்பவில்லை என்று ஒரு சரித்திர கருத்து சொல்றோம். நடந்ததை சொல்றோம். அதனால் நீங்க ரெண்டு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கணும்..

இது ஐடியாலஜிக்கல் பேஸ் வேறுவேறாக  இருக்கக்கூடிய கட்சி.  சனாதான தர்மத்தை எப்படி பாரதிய ஜனதா கட்சி ஆக்ரோசமாக மக்களிடையே பேசுகிறதோ, அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.  அவங்க கொள்கை… அவங்க முடிவு… அவங்களுடைய வளர்ச்சி… அவங்களுடைய சரித்திரம்…

அவங்க சனாதன தர்மத்தை வேற மாதிரி பேசுவாங்க.  நான் அக்ரசிவா பேசுறேன், இதான் அடிப்படை. அதனால் நீங்க பிரச்சனையே இல்லாம,  எப்போதும் போல போகணும்ன்னு நினைக்குறீங்க. தமிழ்நாட்டை  பொறுத்தவரை காங்கிரஸ்ஸின் குரலும்,  திமுகவின் குரலும் ஒரே குரல். அதில் எந்த மாறுபாடும் இல்லை. காங்கிரஸே கொண்டு வந்த சட்டத்தை தமிழ்நாட்டுல டிபன் பண்றாங்க. திமுக சொன்னாங்கன்னா…  சரி. அப்படி இருக்க முடியாது இல்ல.

தேசிய கட்சிக்கு ஒரு நிலை இருக்கு. தேசிய கட்சிக்கு ஒரு மாண்பு இருக்கு.  தேசிய கட்சிகள் அணுகக் கூடிய பிரச்சனைகளில் ஒரு வித்தியாசம் இருக்கு. அதான் நான் சொல்றேன்,  பர்சனலா எனக்கும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கும் என்ன பிரச்சனை ? ஒரு பிரச்சனையும் இல்லை.

பிரச்சனைன்னு எங்க இருக்கு. நோ ப்ராப்ளம்… ஆனால் எனக்கும் தெரியும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று ? அவங்க ஐடியாலஜிக்கல் பேஸ்ல அந்த கட்சியினுடைய சரித்திரத்தை எடுத்து அவர்கள் வருகிறார்கள். அதனால் எதையுமே நான் பர்சனலா எடுத்துக்கல. நாளைக்கு காலையில அதிமுக தலைவர்களை பார்க்கும்போது அதே மரியாதையோடு தான் பழகப் போகிறேன். காரணம் அவங்க கட்சிய டிஃபெண்ட் பண்ணி அவங்க பேசுறாங்க.  மையப்புள்ளி… இணைக்கின்ற புள்ளி என்ன ? பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2024 தேர்தல் என தெரிவித்தார்.