செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி முனுசாமி, அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை என்று உறுதியாக சொல்லி விட்டோம். ஆனால் ஊடகங்களின் விவாதங்களில் கலந்து கொண்டு இருக்கின்ற ஊடகவியலாளர்கள்… ஒரு சில மூத்த அரசியல் விமர்சகர்கள்….   இன்னும் நேரம் வரும்போது கூட்டு சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லி,  மக்களை திசை திருப்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று எங்களை எதிர்த்து இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களும்,  அவருடைய திருக்குமரன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இவர்கள்  நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வந்தால்  இணைந்து விடுவார்கள் என்றெல்லாம் சொலிகிறார்கள்.  நாங்கள் பாரதிய ஜனதா கட்சியை வெளியேற்றியுடனே,  அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக இது போன்ற உளறல்களை உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தான் ஊடகங்கள் ஆகிய உங்களிடத்திலும்,  பத்திரிகை இடத்திலும் நாங்கள் இந்த கருத்தை வலியுறுத்துகிறோம். எந்த காரணத்தைக் கொண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்….  ஏற்கனவே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு,  பாரதிய ஜனதா கட்சியை வெளியேற்றப்பட்டு,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி…  எங்களுடைய  கழகத்தினுடைய பொதுச் செயலாளர் போற்றுதலுக்குரிய எடப்பாடியாரின்  தலைமையில் கூட்டணி அமைத்து,  2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.