செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்ந்து பலமுறை அரசை…  முதலமைச்சரை….  திராவிட முன்னேற்றக் கழக அரசை… மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்….  மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடி அவர்கள் அறிக்கைகள் மூலமாக….  தன்னுடைய ட்விட்டர் பதிவியின் மூலமாக…  வலியுறுத்தி இருந்து கொண்டு இருந்தாலும்  கூட, நான் ஏற்கனவே இன்றைக்கு ஆளுகின்ற அரசின் சார்பில் இருக்கக்கூடிய சுகாதாரதுறையை….

இந்த துறை செயல்படாமல் இருக்கின்றது. திறன் அற்ற துறையாக இருக்கின்றது….  சுகாதாரத்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் ICUவில் இருக்கிறது என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன். அதை தொடர்ந்து குழந்தை பாதிக்கப்பட்டதும் எதிர்க்கட்சித் தலைவருடைய அறிவுறுதலின் பேரில் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பரிதவிக்கின்ற குழந்தையை பார்த்து பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு….

மருத்துவமனையில் இந்த சுகாதாரத்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் தலை இல்லாத துறையாக இருக்கிறது என்றெல்லாம் நான் குறிப்பிட்டேன். ஆனால் இன்று வரை அந்த நிலை மாறாமல் தொடர்ந்து இந்த அரசிலே பல்வேறு துறைகளில் விமர்சனம் இருந்தாலும் கூட சுகாதாரத்துறை சுகாதாரத்துறை தொடர்ந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மக்களுடைய உயிர்காக்கக்கூடிய உன்னதமான துறை.  அதனால் இன்றைக்கு அந்த துறையில் மக்கள் மட்டுமல்ல…. நோயாளிகள் மட்டுமல்ல… எல்லோருமே அதிருப்தியில் இருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் செவிலியர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பாரா மெடிக்கல் ஸ்டாப் என்று சொல்லக்கூடிய மருத்துவம் சார்ந்த – சாராத பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக பாத்தீங்கன்னா சென்னையில் எம்ஆர்பி செவிலியர் கொரோனா காலத்துல தங்களுடைய உயிரை துச்சம் என மதித்த செவிலியர்கள் நடுரோட்டில் அமர்ந்து மயக்கம் அடைந்து… உயிரை பணயம் வைத்து…. இரவு பகலாக விளக்குகளை ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு தான் ஏதோ பேச்சுவார்த்தை என செய்தியில் பார்த்தேன். இருந்தாலும் கூட இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது ? அவர்கள் பணியாற்றினார்கள்…

இந்த அரசிலே அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை  ஏற்கப்படவில்லை. உயர் நீதிமன்றம் சொல்கிறார்கள்… உயர்நீதிமன்றம் சரியான ஆணை வழங்கியிருக்கிறது. உயர்நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும்  என்று செவிலியர்கள் வலியுறுத்துகிறார்கள் இந்த அரசுக்கு… அந்த செவிலியர்களுக்கு பணி கொடுப்பதற்கு மனம்  இல்லை. ஆனால் இன்றைய அரசு, அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எம்ஆர்பி செவிலியர்களுக்காக….

தேர்தல் அறிக்கையிலே…. நாங்கள்  ஆட்சிக்கு வந்தால் எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னார்கள். என்னுடைய கேள்வி இந்த அரசு …. சுகாதாரத்துறை அமைச்சர்….  இதுவரை எத்தனை செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் ? எவ்வளவு பேரை நிரந்தரம் பண்ணி இருக்கீங்க… எத்தனை டாக்டர்களை பணி நியமனம் செய்துள்ளீர்கள்.

எவ்வளவு பேருக்கு ப்ரமோஷன் கொடுத்து உள்ளீர்கள். எதுவுமே நடக்கவில்லை. இரண்டரை ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் எத்தனை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது ? அம்மாவுடைய ஆட்சியில் எடப்பாடியார் காலத்தில் மட்டுமே  வெளிப்படையோடு….   மெரிட்ல…  ஜெனியூனா 37 ஆயிரத்து 500 பேரை எம்ஆர்பி என்று சொல்லக்கூடிய மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டுல,  நாங்க ரெக்ரூட் பண்ணனுனோம். பெட்ரோல் இல்லாம வண்டி எப்படி ஓடும்.

மருத்துவர்கள்,  பணியாளர்கள், செவிலியர்களை பணி நியமனம் செய்யாமல் எப்படி இந்த துறையை நீங்கள் நடத்த முடியும் ? எண்ணிப் பாருங்க…  வருஷத்துக்கு 4000 பேரை நாங்க பணி நியமனம் செய்தோம்.  சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தேன்.  நீங்க எத்தனை பேரை இதுவரைக்கும் பணி நியமனம் செஞ்சீங்க என ஆவேசமாக பேசினார்.