
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,மத்தியில் கூட்டாட்சி எங்க இருக்குது ? கூட்டணி ஆட்சி தான் நடக்குது. இப்படி ஒரு கேள்வி வைக்கிறீங்க நீங்க.. பாஜக தலைமையில் ஒரு கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி. இந்தியா VS NDA. கூட்டணி ஆட்சி தான் இந்த நாட்டில் நடக்கிறதே தவிர கூட்டாட்சி இல்லை. கூட்டாட்சி, மாநில தன்னாட்சி இந்த முறையை இதுவரை வரலை. ஆங்காங்கே அய்யா விபி. சிங் இருக்கும்போது, தேவ கவுடா இருக்கும்போது, ஐ.கே குஜரால் இருக்கும்போது… ஆங்காங்கே மாநில கட்சிகள் தேர்வு செய்த பிரதமர்கள் இருந்தாங்க.
ஒரு கெடு வாய்ப்பாக அவங்க நீண்ட நாட்கள் நீடிக்க முடியல. அதில் இருந்ததில் சிறந்த இந்திய பிரதமர் ஐயா விபி சிங் தான், உங்களுக்கு தெரியும். நேருக்கு அப்புறம் அவர தான் நாம கொண்டாடணும். நேரு உடைய இடு இணை இங்கு யாரும் இல்லை. ஒரு செல்வந்தர் மகன் 16 ஆண்டுகள் வெள்ளைக்காரன் சிறையில் நாட்டின் விடுதலைக்கு இருந்தாரு. அதனால நாம போற்றுகின்றோம், அது வேற.
ஆனால் இப்போ கூட்டணி ஆட்சிகள் தான் இருக்கே ஒழிய கூட்டாட்சி எங்க இருக்கு. கூட்டாட்சி வரணும்னா…. ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிக்கணும். காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையில் ஒன்னு, பாரதிய ஜனதா தலைமையில் ஒன்று என்பதை ஒழிக்கணும். அந்தந்த மாநில கட்சிகள் மேலோங்கி நின்று, இந்தியாவை யார் ஆள்வது என்று கூடி பேசி ஆளும் போது, நாம உட்கார்ந்து பேசுற மாதிரி பேசி…. அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க….
அவன் 40 இடம் வென்று இருக்கான். தெலுங்கர் நீ ஆண்டுட்ட நரசிம்மராவ், தேவ கவுடா கர்நாடகா நீ ஆண்டுவிட்டாய். மலையாளி தமிழனுக்கு ஒரு வாய்ப்பு இல்லை. குடியரசுத் தலைவி பதவியில் மட்டும் ஒண்ணுத்துக்கும் உதவாம உட்கார வச்சி இருந்த அவனுக்கு ஒரு அஞ்சு வருஷம் கொடு. அப்பறோம் எனக்கு ஒரு அஞ்சு வருஷம் கொடு என சுழற்சி முறையில் கொடுத்தா… என் நாடு, என் தேசம் என எனக்கு பற்று வரும். அது இல்லையே நீ இந்தியை தாய்மொழியாக கொண்டவன் தான் ஆள முடியும் அப்படின்னா… அப்பறோம் எதுக்கு நான் இங்க இருக்கணும் ? என தெரிவித்தார்.