ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய ராணுவம் அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள தப்ரிஸ் விமான நிலையத்தில், போருக்கு தயாராக நின்றிருந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான இரண்டு எஃப்-4 மற்றும் எஃப்-5 ரக போர் விமானங்களை இஸ்ரேலிய படைகள் முற்றிலும் அழித்துள்ளன.

இது குறித்து இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தில், அந்த விமானங்கள் விமான ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும்போது, துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டு அவை வெடித்துச் சிதறுவது பதிவாகியுள்ளது.

ஈரானின் வான்வெளி நடவடிக்கைகளை முடக்கவும், இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தகர்க்கவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற கூட்டு ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.