இந்தியா என்றாலே கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மைக்குத் தான் பெயர் போனது. ஆனால், ஒரு வெளிநாட்டுப் பயணி நமது நாட்டைப் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த வகையில், மாயா ரே என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியாவுக்குத் தனியாகச் சுற்றுலா வந்தபோது, அவரை ஆச்சரியப்படுத்திய 5 முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியர்கள் மிகவும் நட்பானவர்கள் என்றும், எங்கு உதவி கேட்டாலும் ஓடி வந்து உதவுவார்கள் என்றும் பாராட்டியுள்ள அவர், இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது தனது பயணத்தை மிக எளிதாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் வயது அல்லது சம்பளம் பற்றிப் பேசுவது ரகசியமாகத் தவிர்க்கப்படும் நிலையில், இந்தியாவில் மக்கள் எவ்வித தயக்கமுமின்றி திருமணம் மற்றும் வருமானம் பற்றி வெளிப்படையாகக் கேட்பது தனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்ததாக மாயா குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Maya Rey (@rey.ontheway)

இந்திய உணவுகளின் சுவைக்குத் தான் அடிமையாகிவிட்டதாகவும், இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு அத்தகைய சுவையான உணவை எங்குமே பார்க்க முடியவில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவைப் புரிந்துகொண்டு அதன் அழகை ரசிப்பவர்களுக்கு இந்தியா எப்போதும் சொர்க்கம் தான் என நெட்டிசன்கள் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.