நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, நீட் தானே… மருத்துவத்திற்காக தானே என்று நினைக்காதீர்கள்… திராவிட கழகத்தின் சார்பில் 2017இல் அனிதா மறைவதற்கு முன்னாள்…  நீட் தேர்வு வருவதற்கு முன்னால்….  தமிழ்நாடு எங்கும், பட்டி தொட்டி எங்கும்… கிராமம் தோறும்…. எங்களைப் போன்ற இளைஞர்களை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று திராவிட கழகத்தின் தலைவர், ஆசிரியர் இரு சக்கர வாகன பரப்புரை பிரச்சார பெரும் பயணத்துக்கு அனுப்பினார்கள்.

நாங்க அப்ப கல்லூரி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அப்போ ஒவ்வொரு ஊருக்கும் போன பொழுது…. எந்த உணர்வோடு போனோம்… நீட்டு ஒழிக்க முடியாது என்று இன்று நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்… அது என்ன ரகசியம் ? திமுக கிட்ட இருக்குன்னு சொன்னீங்களே, சொல்லுங்க என்று சொன்னார்கள்….  என்னுடைய உரையை முடிக்கின்ற பொழுது அந்த ரகசியத்தை நான் சொல்லுகிறேன்.

எந்த துணிச்சலோடு, எந்த தைரியத்தோடு 2017இல் தொடங்கி இன்றைக்கு வரை போராடுகிறோம். இன்றைக்கும் அந்த கையெழுத்து இயக்கம் இருக்குனு சொன்னால் உட்கார்ந்து இருக்கக்கூடிய நீங்கள்… பேசுகிற நான்.. மேடையில் இருப்பவர்கள் எல்லோரும் மிகப்பெரிய திராவிட இயக்கம் பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பாரம்பரியத்தில் வந்தவர்கள். அவர்கள் நுழைவு தேர்வை ஒழித்துக் கட்டினார்கள் என தெரிவித்தார்.