செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் விஷயத்துல அண்ணா திமுக எதிர்ப்பாக இருந்தாலும்,  அதற்கு ஒரு மிகப்பெரிய தீர்வாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அண்ணன் எடப்பாடியார். DMK நீட் விலக்கு  2 தடவை தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்க. இதே தீர்மானத்தை தான  அண்ணா திமுகவில் நாங்களும் நிறைவேற்றி ஜனாதிபதி கிட்ட கொடுத்தோம்.

அன்றைக்கு கொடுத்த பொழுது என்ன சொன்னார்கள் ?  திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று  சொன்னது யாரு ? உதயநிதி ஸ்டாலின் தானே…  ஏன் இதுவரைக்கும் முதல் கையெழுத்து போடல ? ஏன் இதுவரைக்கும் நீட்டை ஒழிக்கவில்லை.

இதை மக்கள் கேட்கிறாங்க… மாணவர்கள் கேட்கிறார்கள்…  29 மாதங்களுக்குப் பிறகு  இப்போ நீட்டை ஒழிக்கப்போறோம்னு கிளம்பி இருக்காங்க.  நாங்க ஒரு கையெழுத்துல நீட்டை ஒழிப்போம் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்,  இன்றைக்கு ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி ? இரட்டை வேடம் வேண்டாம் என்று சொல்கிறோம் என தெரிவித்தார்.