திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், நாம் எல்லாம் டெல்லிக்கு போவோம். டெல்லியில் ஒக்காந்து போராடுவோம்… ஒன்றுபட்டு போராடுவோம். நீட் விலக்கை பெற்றுட்டு வருவோம். வந்த பிறகு அதன் முழு  வெற்றியையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்…  அதில் எங்களுக்கு எந்தப் பங்கும் வேண்டாம் என்று சொன்னவர் உதயநிதி ஸ்டாலின். யாரு சொல்லுவா இன்னைக்கு ? அப்படி சொன்னார்.

ஆனால் எடப்பாடி வருவாரா ? கூட்டணி தர்மத்தின் கூட்டணிக்காக….  CAA,NRC என்று எல்லா மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி,  எப்படி வருவார் ? வரமாட்டார்…  சரி இப்போ கூட்டணியில் இல்லைல்ல…  கூட்டணியை முறிச்சிக்கிட்டீங்க தான…   கூட்டணி  முறிச்சுடுச்சி  தான  இப்ப சொல்றோம்…

உதயநிதி ஸ்டாலின் அழைப்பார்…  வாங்க….  சுய மரியாதை இருக்கு இருக்குல்ல… இனமான உணர்வு இருக்குல்ல…  பாஜக உடனான கூட்டணி முறிச்சிக்கிட்டீங்கல….   உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு கரம் கோர்த்து,  டெல்லிக்குச் சென்று நீட் எதிர்ப்புக்காக போராடுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும், அஇஅதிமுகவுக்கும் திராணி இருக்கிறதா ? என்று கலைவாணர் அரங்கத்தில் நான் கேட்கிறேன் என தெரிவித்தார்.