செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் சொல்லிருக்காரு…  100 நாட்களுக்குள்ளாக 10,000 கொடி கம்பங்களை தமிழகம் முழுவதும் நடப்போகிறோம் என்று….  கோவையில் கூட ஒவ்வொரு தொகுதியிலும் என்ன எண்ணிக்கை மாநில தலைவர் சொல்லி இருக்கிறாரோ,  அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக எங்கள் கட்சியினுடைய தொண்டர்கள் கொடிக்கம்பத்தை நட போகிறார்கள்….

எந்த கொடி கம்பமும்,  கொடியும் கண்ணில் படக்கூடாது என இந்த அரசு நடவடிக்கை எடுத்ததோ, ஒவ்வொரு வீடுகளிலும் கட்சிக்காரர்கள் கொடி கம்பம் போட்டு கொடியை ஏற்ற இருக்கிறார்கள். ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சி மாதிரியான அச்சுறுத்தல்களுக்கும்,  பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சியதில்லை, அஞ்சப் போவதுமில்லை…

இவற்றையெல்லாம் தாண்டி நூற்றுக்கணக்கான எங்களுடைய நிர்வாகிகளை பலி கொடுத்து இந்த தமிழகத்தில் நாங்கள் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் இவை எல்லாம் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.சட்டத்தின் உடைய துணை கொண்டு இவர்களின் அநீதியை எதிர்ப்பதற்கு எங்களுடைய நிர்வாகிகளும் தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.