இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், தனது மனைவி ஈஷானியை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாள் காதலர்களாக இருந்த இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். பார்ப்பதற்குக் க்யூட்டான ஜோடியாக வலம் வந்த இவர்கள், தற்போது மனக்கசப்பு காரணமாகப் பரஸ்பரம் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் சாஹர், இந்த முடிவு தங்களுக்கு மிகவும் கடினமானது என்றும், அதே சமயம் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் தனியுரிமைக்கும் ரசிகர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா – நடாஷா பிரிவைத் தொடர்ந்து, இப்போது மற்றொரு இளம் கிரிக்கெட் வீரரின் மணவாழ்க்கை முறிவுக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.