அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக நேற்று பொறுப்பேற்றார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கின. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு கூறியதாவது அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விட விடுவோம், அமெரிக்க கொடியில் உள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம் என்றும் கூறினார். செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவோம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வளம் வாய்ந்த,சுதந்திரம் நிறைந்த, நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே என்னுடைய நோக்கம்.

இதற்கு முன்பு கிடைக்காத வாய்ப்பு தற்போது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை அறிவிக்கப்படுகிறது என்று கூறினார். ஜோபைடன் ஆட்சி செய்த போது பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்க்க அவரால் முடியவில்லை. இயற்கை பேரிடர்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அமெரிக்காவில் ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். ராணுவத்திற்கு நாட்டை காப்பதே இனி வேலையாக இருக்கும் என்றும், உலகப்போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என்றும் கூறினார்.

நாங்கள் பனாமா கால்வாயை மீட்டெடுக்கப் போகின்றோம். சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு எடுக்கப்படும். வளங்களை அதிகரிக்கக் கூடிய நாடாக மாறும், தைரியத்துடனும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படும் தருணம் இது. உலகிலேயே மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா இருக்கும். இதனிடையே உலக நலனுக்காக கடவுள் தன்னை காப்பாற்றியதாக துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர்கள் பேசினார்.