
திமுக ஆன்மீகத்துக்கு ஆதரவானது என முதல்வர் ஸ்டாலின் பேசுனது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், கோட்பாடு ஆரம்பிச்சது கடவுள் மறுப்பு. ஐயா பெரியார் அவர்கள் சொன்னது கடவுள் மறுப்புல, ஆரம்பிச்சது. அதுக்கு பிறகு அண்ணா ஒன்றே குலம், ஒருவரே தேவன் என சொல்லிட்டாரு. தமிழ் தேசிய இனம் வந்து ஒரு தொன்மையினம். அதுக்குன்னு ஒரு மெய்யியல் கோட்பாடு. அதுக்கு ஒரு வழிபாட்டு முறை இருக்கு. இயற்கை எமது வழிபாடு. மூத்தோர் எமது தெய்வங்கள். இந்த வழிபாட்டு முறையில் தான் வருது. எங்களுக்கு கடவுள் கிடையாது, எங்களுக்கு இறை உண்டு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும் என தமிழ் மறை கற்பிக்குது. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என சொல்லுது. இறை-ன்னா அரசன் என பொருள்.எங்க குலதெய்வம்ன்னு பார்த்தீங்கன்னா.. எங்க முன்னோர்கள்.. குல மூதாதைகளை நாங்கள் வணங்குகிறோம்.
சிவன், மாயோன், முருகன், இந்திரன். இதுல இந்திரனை வேந்தன் என சொல்லுறோம். கொற்றவை இதெல்லாம் வணங்குகிறது இல்லையா ? அது மாதிரி எனக்கு குலதெய்வம் வீரமாகாளி என்று எங்க சிவகங்கை மாவட்டத்தில் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தெய்வம் இருக்கு. அதுல வழிபாட்டு முறையை நாம் ஏற்று இருந்து இருக்கலாம். நாங்க பெரியார் கொள்கை வரும்போது நாங்களும் இறை மறுப்பு , கடவுள் மறுப்பு எல்லாம் பேசின ஆட்கள் தான் தெரிவித்தார்.