ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் மூலமாக புகார் ஒன்று கிண்டியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குறிப்பாக 124 IPC  பிரிவின் கீழ் கீழ் வழக்கு பதிவு செய்து,  7 ஆண்டுகள் வரை இவர் சிறையில் இருக்கக்கூடிய வகையிலும்,  பிணையில் வெளியே வர முடியாத வகையிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக IPC 735, IPC 436, IPC 353, IPC 506  உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.   உச்சபட்ச அதிகாரம் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர், கவர்னர் மாளிகை,  ஆளுநர் பயணிக்க கூடிய இடம்,  நிகழ்வுகள் இதுபோன்ற இடையூறு செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து,  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை சார்பில் கேட்டுக் கொள்ள பட்டது.

அதன் அடிப்படையி இந்த 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் நேரடியாக ஆளுநரை சந்தித்து விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் 5  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க வருகிறது. ஆளுநர் மாளிகையில் இருந்து கேட்கப்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றாலும் ? இந்த ஐந்து பிரிவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருக்கா  வினோத் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இந்த சம்பவத்தில்  ஈடுபட்டு இருக்கிறார் உள்ளிட்ட தகவல்கள் FIRஇல் இடம் பெற்றுள்ளது.