செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பண்ரூட்டி இராமச்சந்திரன், பாஜகவுடன் ஒருவருக்கு ஒருவர் பேசுவது என்ன தப்பா ? சாதாரணமா பேசிட்டு இருக்கோம். நீங்களும் நானும் பேசுறது இல்லையா ? கூட்டணி குறித்து பாஜக பேசுதுன்னு சொல்லல.  அவுங்க பேசிட்டு இருக்காங்க அவ்ளோதான் என தெரிவித்தார்.

உடனே அருகில் இருந்து பேசிய ஓபிஎஸ், பாஜகவுடன் தொடர்பில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் தெரிவித்த போது, அருகில் அமர்ந்திருந்த  இருந்த வைத்தியலிங்கம் பேசும் போது, பிஜேபி உடன் நட்பு தொடர்பு இருக்கின்றது என கூற, நட்பு கூட்டணியா மாற வாய்ப்பு இருக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், உங்க எண்ணம் பலிக்கனும் என தெரிவித்தார்.

பிறகு தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், கூட்டணி யார் தலைமையில் என கேட்காதீங்க. சாமானியனே கூட்டாக நின்று தேர்தலை சந்திக்க முடியும்.  கூட்டணி உறுதியான உடன் முதல்ல உங்களுக்கு தான் சொல்லணும். இரட்டை இலை வழக்கு நீதிமன்றத்துல இருக்கு. வழக்கு முடிவு பெற்ற உடன் உரிய பதிலை உங்களிடம் சொல்லுகிறோம் என தெரிவித்தார்.

அதிமுக யாரு ? நாங்க தான்  அதிமுக. துணைத்தலைவர் பதவி என்பது அரசியலமைப்பு சட்டத்துல இல்லை. சபாநாயகர் தான் கொடுக்கின்றார். எதிர்க்கட்சி தலைவர்,  மற்ற  பொறுப்பு கட்சி பட்டியல் தருகின்ற பொழுது என்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் தான் அதை அறிவித்தேன ஒழிய,  எந்த சட்டத்திலும் எதிர்க்கட்சி தலைவர் தவிர துணை தலைவர்  பொறுப்பு இல்லை என தெரிவித்தார்.