செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சட்டப்பேரவையில்  ஒரு தீர்மானம் கொண்டு வந்தாங்க. ஒருதலை பட்சமான தீர்மானம். மத்திய அரசுக்கும், இதுக்கு எந்த சம்மந்தமே கிடையாது. இவர்களும் கர்நாடகவில் இருக்கிற காங்கிரஸ் சேர்ந்து கபடி மேட்ச் விளையாடுவது போல விளையாண்டுக்கிட்டு இருக்காங்க. அங்க ஒன்னு பேசுறாங்க, இங்க ஒன்னு பேசுறாங்க. இதை எல்லாம் கண்டிக்க வேண்டும். இதை எல்லாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்லணும். இதை எல்லாம் மக்கள் பாத்து கொண்டிருக்கார்கள்.

இது தான் நம்முடைய நோக்கமே தவிர,  வேற ஏதும் நம்ம நோக்கம் இல்லை. 2024 பாராளுமன்ற தேர்தலை பொறுத்த வரை நாங்கள் மிக தெளிவாக இருக்கின்றோம்.  10 ஆண்டு காலமாக நடந்து முடிந்து இருக்க கூடிய நரேந்திர மோடி உடைய ஆட்சி மறுபடியும் 5 ஆண்டு காலம் வேண்டும் என்று மக்கள் மன்றத்தில் வைக்கும் அதே நேரத்துல 35 மாதத்தில் திமுக செய்து இருக்க கூடிய தவறுகளை சுட்டிக்காட்டணும். இது சம்மந்தமாக தலைவர்களுடைய கருத்து.

கிரவுண்ட்ல இருக்காங்க பெருங்கோட்ட  பொறுப்பாளர்கள் கருத்து. யாத்திரை எப்படி போயிட்டு இருக்கு ?  யாத்திரையில ஏதும் மாற்றம் பண்ணனுமா ? என பேசினோம். தமிழகத்தினுடைய அரசியல் களத்தை பத்தி….  குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பொய்களை பற்றி பேசுகிறோம். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி 143 தொகுதிகளில்  தனி கவனம் செலுத்துறாங்க.

அமைப்பு எப்படி இருக்கு ?  உள்ள பில்டப் எப்படி இருக்கு ? அமைப்பின்  பலம், அத ரிவ்வியூ பண்ணனும்.  ஒரு ஒரு தொகுதிக்கும்  பொறுப்பாளர்கள் இருக்குறாங்க. என்ன வேலை செஞ்சிருக்குறாங்க? எந்த அளவுக்கு அவர்கள் வந்த பிறகு தொகுதியினுடைய உள்கட்டமைப்பு அதிகமாயிருக்கு. அதை 3 மாதத்திற்கு ஒருவாட்டி ரிவ்வியூ பண்ணுவோம் என தெரிவித்தார்.