தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா ஹோம்லி லுக்கில் நடித்து வந்தார். இவர் அஜித்துடன் சேர்ந்த பில்லா படத்திற்கு பிறகு தான் நயன்தாராவின் மார்க்கெட் வேற லெவலில் உயர்ந்தது என்று சொல்லலாம். முதன் முறையாக நயன்தாரா பில்லா படத்தில் தான் பிகினி அணிந்து நடித்திருந்தார். அஜித் நடித்த பில்லா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பில்லா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதில் முதலில் அசின் தான் நடிக்க இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பில்லா படத்திற்காக அசினை வைத்து படக்குழுவினர் போட்டோ சூட் நடத்தியுள்ளனர். ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அசினால் பில்லா படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து தான் நயன்தாராவை படத்தில் கமிட் செய்துள்ளனர். மேலும் பில்லா படத்திற்காக அசினை வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.