தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காக சிலர் போலியான போலீஸ், ஆர்மி உள்ளிட்ட அரசு துறை சார்ந்த பெயர்கள் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதுகுறித்த  பரவலான தேடுதலுக்கான உத்தரவை காவல்துறைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பிறப்பித்தார்.

அதன் எதிரொலியாக ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு, காவல்துறை வாகனங்கள் தவிர தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலி போலீஸ் ஸ்டிக்கர்கள் இருப்பதை கண்டுபிடித்து, மொத்தம் 127 வாகனங்களில் இருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர். மேலும் போலி போலீஸ் ஸ்டிக்கரைப் பயன்படுத்திய  நபர்களை எச்சரித்து, மீண்டும் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.