கொல்கத்தாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது மைகாலஜிஸ்ட் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. உலகிலேயே தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான். 61 வயதாகும் இவர் ஒரு தாவர மைக்காலஜிஸ்ட் ஆவார். இவர் நீண்டகால அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல தாவரங்களின் பூஞ்சைகள்  தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இவரை போன்று தாவர செடிகளில் பணியாற்றுபவர்கள் யாரும் இதற்கு முன்பு தாவர பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டதில்லை. தற்போது தான் இந்த பாதிப்பு பற்றி வெளியுலகுக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாவர பூஞ்சை உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது தாவரங்களிலிருந்து தொற்று மனிதர்களுக்கும் பரவும் என்பது இதன் வாயிலாக தெளிவாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்