உலக மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றமே கொசுக்கள், வைரஸ்கள் பரவ காரணம் ஆகும். இந்த ஆண்டு 129 நாடுகளில் இருக்கும் மக்கள் டெங்கு அபாயத்தில் இருக்கின்றனர்.

அதாவது மக்கள் தொகையில் பாதி பேர் அபாயத்திலும் இருக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மட்டும் 4,41,898 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 119 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.