இங்கிலாந்து வசிக்கும் சாண்டி என்ற சிறுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு தூங்கிவிட்டால் அவர் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு அபாயம் உள்ளது. அந்த சிறுமிக்கு இருக்கும் சென்ட்ரல் ஹைபோவெண்டிலேஷன் சின்ட்ரோம் காரணமாக தூங்கும் போது மூளை ஏதோ ஒன்றில் கவனம் செலுத்தினால் சுவாசிக்க மறுத்து விடுகிறது. இதன் காரணமாக சுவாசக் குழாயில் இருந்து மூளைக்கு சிக்னல்களை அனுப்ப மருத்துவர்கள் முதுகு தண்டுவடத்தில் துவாரத்தை உருவாக்கியுள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இது போன்ற பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.